search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இன்னும் ஒரு வருடத்திற்குள் தேர்தல்: காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சொல்கிறார்
    X

    இன்னும் ஒரு வருடத்திற்குள் தேர்தல்: காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சொல்கிறார்

    • ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள்,
    • தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல், இந்தியாவில் இன்னும் 6 மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் வரப்போகிறது. யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி (உ.பி. முதல்வர் பதவி) ஆடிக்கொண்டிருக்கிறது. பாஜன் லால் சர்மா (ராஜஸ்தான் முதல்வர்) தள்ளாடுகிறார். பட்நாவிஸ் ராஜினாமா கூட செய்ய தயாராகிவிட்டார்.

    ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள் (பிரதமர் மோடியை கிண்டல் செய்து) தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது என்ன அணிவது என்பது குறித்து அவர்கள் கவலைப்படப்போவதில்லை.

    கட்சிகளை உடைத்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறைக்கு தள்ளியவர்கள், மிரட்டியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.

    இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பூபேஷ் பாகல் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

    Next Story
    ×