search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத் அருகே ரூ.1,800 கோடியில் ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை- தெலுங்கானா அரசுடன் ஒப்பந்தம்
    X

    ஐதராபாத் அருகே ரூ.1,800 கோடியில் 'ஏர்பட்ஸ்' தயாரிக்கும் தொழிற்சாலை- தெலுங்கானா அரசுடன் ஒப்பந்தம்

    • ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரூ.1800 கோடியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஐபோன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்த தெலுங்கானா மாநில அரசு பர்சனான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

    மேலும் ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டிலேயே ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் ஐபோன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×