search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷூவிற்குள் மறைந்து இருந்து படமெடுத்த பாம்பு- அதிர்ச்சி வீடியோ
    X

    ஷூவிற்குள் மறைந்து இருந்து படமெடுத்த பாம்பு- அதிர்ச்சி வீடியோ

    • ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது.
    • சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.

    ராஜஸ்தானில் ஷூவுக்குள் பதுங்கிய பாம்பு ஒன்று படமெடுத்து சீறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு மனிதனின் குடியிருப்புகள்கூட சேதம் அடைந்துள்ளன.

    இதுபோன்ற காலங்களில், நிலத்தில் சந்துபொந்து, இண்டு இடுக்குகளில் வாழும் உயிரினங்களின் வாழ்விடங்கள் அதிக அளவில் சேதம் அடைந்து அவை வீதிக்கு வருகின்றன. குறிப்பாக பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பான, மேடான வாழ்விடங்களைத் தேடி மனிதனின் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுவது வாடிக்கை. புதர் மண்டிய பகுதிகள், ஒதுக்குப்புறமான வீடுகளில் பாம்புகள் புக அதிக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தானை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர், நீரஜ் பிரஜாபத், ஒரு வீட்டில் சிறுவர்களின் ஷூவில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அதுபற்றிய வீடியோக்கள்தான் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் அதில் ஒரு பாம்பு பதுங்கியிருப்பது மேலோட்டமாக பார்த்தபோதே தெரிந்ததால் வீட்டின் உரிமையாளர், பாம்புபிடிவீரரை அழைத்துள்ளார். அவர் வந்து பாம்பு பிடிக்கும் குச்சியால் காலணியை தொட்டதும், அதில் பதுங்கியிருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அது படமெடுத்தபடி நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்தது.

    நீரஜ், அந்த பாம்பை லாவகமாக பிடித்ததுடன், அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப பொத்தானை அழுத்தி உள்ளனர்.

    Next Story
    ×