search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரவல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
    X

    கொரோனா பரவல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249 ஆகவும் இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 30-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,604-ஆக இருந்தது. அதன்பின்னர் 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

    அக்கடிதத்தில்,

    * கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

    * கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    * கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    * இன்ஃபுளூயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×