search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பிரமுகர் சுட்டுக்கொலை
    X

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பிரமுகர் சுட்டுக்கொலை

    • மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
    • காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் ராஜூஜா. பா.ஜனதா பிரமுகர். தொழில் அதிபராகவும் இருந்தார்.

    இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் துர்காபூரில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதியில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென்று ராஜூஜா சென்ற காரை வழிமறித்தனர். உடனே கார் நிறுத்தப்பட்டது.

    உடனடியாக மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராஜூஜா பலத்த காயம் அடைந்தார். மேலும் துப்பாக்கி சூட்டில் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு போராடிய ராஜூஜா மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ராஜூஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவ இடத்தை பர்த மான் போலீஸ் சூப்பிரண்டு கம்னா சிங் சென் பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டார். ராஜூஜாவை கொன்ற மர்மநபர்கள் யார்? அவர் எதற்காக கொல்லப் பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சம்பவம் நடந்த உடனேயே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி காலத்தில் ராஜூஜா சட்டவிரோதமாக நிலக்கரி வர்த்தகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×