search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பழங்குடியின பெண்கள் தாலி அணிய வேண்டாம் என கூறிய ஆசிரியை சஸ்பெண்ட்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பழங்குடியின பெண்கள் தாலி அணிய வேண்டாம் என கூறிய ஆசிரியை சஸ்பெண்ட்

    • பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
    • பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.

    பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.

    மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

    அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×