search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்த கேரள அரசு.. சர்ச்சை!
    X

    மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்த கேரள அரசு.. சர்ச்சை!

    • கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
    • னியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒருவரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

    இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனித்து வரும் நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் வாசுகிக்கு பொது நிர்வாக [அரசியல்] துறை உதவும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில் கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில், 'இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவைடிகை ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், 'வெளியுறவுத்துறை மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக வெளியுறவு விவகாரங்களில் செயல்பட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×