search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  மலரும் நினைவுகள் மீனா: சவாலான ஒட்டக சவாரி...!
  X

  மலரும் நினைவுகள் மீனா: சவாலான ஒட்டக சவாரி...!

  • நான் ஆமாம் சார், உங்கள் வயதுக்கு ஏற்ற கெட்-அப் உங்களுக்கு. என் வயதுக்கு ஏற்ற கெட்-அப் எனக்கு, அவ்வளவுதான் என்பேன்.
  • கோட்டாசீனிவாசராவ் முதியவர் வேடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

  வில்லனாக தூள் பறத்தியவர்... கதாநாயகனாவும் கலக்கியவர் சத்யராஜ் சார். அவர் சாதாரணமாக வேட்டி-சட்டையில் நடித்தால் எப்படி இருக்கும்?

  வள்ளல் படத்தில் அப்படித்தான் நடித்து இருப்பார். அந்த படத்தில் என்னுடன் ரோஜா, சங்கீதா, கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், லட்சுமியம்மா, மனோரமா ஆச்சி ஆகியோரும் உண்டு.

  படம் முழுக்க கலகலப்பாக இருக்கும்.

  ஒற்றை வரியில் படத்தின் கதையை பற்றி சொல்வதென்றால் காதலிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த வள்ளல் என்பது தான்.

  வள்ளலாக வரும் சத்யராஜ் சாருக்கு வயதான 'கெட்-அப்' அந்த கெட்-அப்பில் அவரை பார்ப்பதில் எனக்கு சந்தோசம். ஏனெனில் அடிக்கடி என்னை அவர் வாரி விடுவார். எனக்கும் அவரை வாருவதற்கு ஒரு சான்ஸ். உனக்கு மேக்-அப். காஸ்ட்யூம் நல்லாயிருக்கு... ஆனால் எனக்கு பார்... என்பார்.

  நான் ஆமாம் சார், உங்கள் வயதுக்கு ஏற்ற கெட்-அப் உங்களுக்கு. என் வயதுக்கு ஏற்ற கெட்-அப் எனக்கு, அவ்வளவுதான் என்பேன்.

  அதை கேட்டதும் 'நக்கலா... நீ ரொம்ப தேறிட்டே...' என்பார். படமும் ஜாலியா இருந்தது. இப்படி, ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்ததும் ஜாலியாக இருந்தது. மணிவண்ணன் சார், சத்ய ராஜ் சாரெல்லாம் எங்கு படப்பிடிப்புக்கு போனாலும் எல்லோரையும் கிண்டல் அடிப்பார்கள். அதில் என்னையும் விடுவதில்லை.

  அவர்களோடு பழகவிட்டதால் வாய்ப்பு கிடைக்கும் போது நானும் விடுவதில்லை. சின்ன குழந்தையில் இருந்தே அவர்களோடு விளையாடியவள் நான். எனவே அவர்கள் என்னை வாரினாலும் அதில் வாஞ்சை இருக்கும்.

  அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் காரைக்குடியில் படமாக்கப்பட்டது. குதிரை பூட்டிய சாரட் வண்டியில் நான் இருப்பேன். சத்யராஜ் சார்தான் வண்டியை ஓட்டுவார்.

  அப்போது சண்டை காட்சி வரும். காட்சி முடிந்ததும் மீண்டும் சாரட் வண்டியை வேகமாக ஓட்டுவார். அப்போது வண்டியே சாய்ந்து விடும். அப்போது நாங்கள் பயந்த பயம் இருக்கே... அப்பப்பா... எப்படியோ தப்பிச்சுட்டோம்.


  பஞ்சரம்

  இதே காலக்கட்டத்தில் பஞ்சரம் என்ற தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. குடும்பங்களில் நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். கோடி ராமகிருஷ்ணா டைரக்டர். அவர்தான் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமும்.

  கோட்டாசீனிவாசராவ் முதியவர் வேடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

  கதைப்படி நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். நான் என் வயதை ஒத்த வினோத் குமாரை காதலிப்பேன். ஆனால் குடும்ப சூழல் காரணமாக என்னை விட வயதான ஜமீன்தாருக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். அவர் என்னை கொடுமைப்படுத்துவதும், வேலைக்காரி மூலம் நான் தப்புவதும் கதைதான்.

  வித்தியாசமான பாத்திரங்கள். எனக்கு கட்டி வைத்தவருக்கு இரவு கண் தெரியாது. பகலில் காது கேட்காது. சின்ன பெண்ணான என்னை கொடுமைப்படுத்தும் காட்சிகள்தான் 'அய்யோ பாவம்' என்று பார்ப்பவர்களை பேச வைத்தது. படத்தின் டைரக்டரோ செட்டுக்கு வந்து சுட சுட டயலாக் எழுதி தருவார். அதை உடனே பேச வேண்டும். தெலுங்கு நான் பேசினாலும் சரளமாக பேசவும், படிக்கவும் அப்போது தெரியாது. இதனால் உடனடியாக வசனங்களை பேசுவது கடினமாக இருந்தது. ஆனாலும் சமாளித்து நடித்தது மறக்க முடியாதது.

  முதுல்ல மொகுடு

  இதுவும் அந்த கால கட்டத்தில் நான் நடித்து வெளியான தெலுங்கு படம்தான். இந்த படத்தில் லட்சுமி அம்மாதான் என் அம்மா பாத்திரத்தில் நடித்தார். முழுக்க குடும்ப பாங்கான படம். அம்மா பேச்சை கேட்டு கணவரை பிரிவது. பின்னர் புரிந்து ஒன்று சேர்வதுதான் கதை.

  தெலுங்கு சினிமா சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட என்.டி.ராமா ராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணாதான் அந்த படத்தில் கதாநாயகன். பால கிருஷ்ணாவை பொறுத்தவரை நன்றாகபழகும், பேசும் சுபாவம் கொண்டவர். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவர் தனது தந்தை மீது வைத்தி ருக்கும் மரியா தையை நான் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

  அவர் என்.டி.ஆர்.மீது முரட்டுத் தனமான பக்தியே வைத்திருக்கிறார். சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் பேசிக் கொண்டிருக்கும் போது தந்தையின் பெருமையை சொல்ல தவற மாட்டார். ஜாலியாக எங்களோடு சீட்டாடுவார். என் அம்மா தான் அவருக்கு முக்கிய கை. சிறிது நேரம் காணவில்லை என்றாலும் 'எங்கே அம்மா... எங்கே அம்மா... என்று பரபரப்பாகி விடுவார். அவ்வளவு தீவிரமாக தேடுவதற்கு என்ன காரணம் தெரியுமா? சீட்டு விளையாடத்தான்.

  சும்மா இருக்கும் போதும், காரில் பயணம் செய்யும் போதும் தனது தந்தை நடித்த படப்பாடல்களை கேட்க தவறமாட்டார். படிப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்தது. அங்கு ஒட்டக சவாரி பிரபலம். படக்காட்சியிலும் நானும், பாலுவும் ஒட்டகத்தின் மீது சவாரி செய்ய வேண்டும்.

  ஒட்டக சவாரி ஈசியானதல்ல. படுத்திருக்கும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்ததும் அது எந்திருக்கும் போது பின்னாடியும், முன்னாடியும் வளைந்து பேலன்ஸ் பண்ணி கொள்ள வேண்டும். இல்லா விட்டால் ஒட்டகம் எழுந்து நிற்கும். நாம் தரையில் மல்லாந்து கிடக்க வேண்டியது தான். ஷூட்டிங் லேட்டாக வருவார். கேட்டால் 'ஷேவ்' பண்ண ஆள் வரவில்லை என்று சாதாரணமாக சொல்வார்.

  இந்த சிக்கலுக்காகவே நான் பார்லரில் இருந்து ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து இருந்தேன். அவர் நான் தங்கி இருந்த அறைக்கே வந்து விடுவார்.

  அந்த படத்தில் ஒரு பாடலில் முஸ்லிம் பெண் போல் வேடமிட்டு நடித்தேன்.

  அதற்காக புருவங்களுக்கு இடைய தனியே மேக்-அப் போட்டு கற்பனையில் அந்த கெட்-அப்பை வைத்து நான் தான் மும்தாஜ் என்று என்னையே நான் நினைத்து பெருமை பட்டுக் கொண்டேன். ஜெய்ப்பூர் அரண்மனைதான் எனக்காக கட்டப்பட்ட தாஜ்மகால் என்று நினைத்துக் கொண்டு நடித்தேன். கற்பனை குதி ரைக்கு பறப்ப தற்கு சொல்லி யா கொடுக்க வேண்டும்?

  இன்னும் எத்த னையோ கன வுகள்... கற்ப னை கள்... நினை வுகள்... பகிர்ந்து கொள்ள வருகிறேன் அடுத்த வாரம்...!

  (தொடரும்)

  Next Story
  ×