search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்- கோகோ காப் பின்னடைவு
    X

    டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்- கோகோ காப் பின்னடைவு

    • ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் ஜெசிகா பெகுலா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் முடிந்ததும் நேற்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னெர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 2-வது இடத்தில் இருந்த ஒலிம்பிக் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழைந்த ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசையில் சறுக்கி இருக்கிறார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெய்லர் பிரிட்ஸ் 12-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இரு இடங்களில் ஸ்வியாடெக் (போலந்து), சபலென்கா (பெலாரஸ்) தொடருகிறார்கள். அதே சமயம் நடப்பு சாம்பியனாக கால்பதித்த அமெரிக்காவின் கோகோ காப் 4-வது சுற்றுடன் நடையை கட்டியதால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். அவர் 3-ல் இருந்து 6-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    Next Story
    ×