என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டென்னிஸ்
- ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- பெண்கள் பிரிவில் ஜெசிகா பெகுலா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் முடிந்ததும் நேற்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னெர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 2-வது இடத்தில் இருந்த ஒலிம்பிக் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழைந்த ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசையில் சறுக்கி இருக்கிறார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெய்லர் பிரிட்ஸ் 12-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இரு இடங்களில் ஸ்வியாடெக் (போலந்து), சபலென்கா (பெலாரஸ்) தொடருகிறார்கள். அதே சமயம் நடப்பு சாம்பியனாக கால்பதித்த அமெரிக்காவின் கோகோ காப் 4-வது சுற்றுடன் நடையை கட்டியதால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். அவர் 3-ல் இருந்து 6-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
- 2024-ன் ஆஸ்திரேலியா ஓபனை சின்னர் ஏற்கனவே கைப்பற்றிருந்தார்.
- விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதியுடன் ஏமாற்றம் அடைந்தார்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பிரபலமான அமெரிக்கா ஓபன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஹாரி ப்ரிட்ஸை எதிர்கொண்டார்.
இந்தில் 6-3, 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். முதல் சர்வீஸில் சின்னர் 88 சதவீதமும், பிரிட்ஸ் 68 சதவீதமும் வெற்றி பெற்றனர். 2-வது சர்வீஸில் சின்னர் 54 சதவீதமும், பிரிட்ஸ் 48 சதவீதமும் வெற்றி பெற்றனர்.
பிரேக் பாயிண்டில் சின்னர் (6/12) என ஆதிக்கம் செலுத்தினர். பிரிட்ஸ் 2/7 பிரேக் பாயிண்ட் பெற்றிருந்தார். சின்னர் மொத்தமாக 96 முறை பாயிண்ட்ஸ் வென்றார். பிரிட்ஸ் 79 முறை வென்றார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சின்னர், தற்போது முதன்முறையாக அமெரிக்க கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதியுடன் வெளியேறினார்.
முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சபலென்கா 7-5, 7-5 என பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்-ஜோர்டான் தாம்சன் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
- 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா தனது முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்யிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையரில் ஜெலினா-லுட்மிலா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ-உக்ரைனின் லுட்மிலா கிச்னாக் ஜோடி, சீனாவின் ஷாங் ஷுய்-பிரான்சின் கிறிஸ்டினா மெடோனோவிக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஜெலினா-லுட்மிலா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த ஜோடிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீரர் பிரிட்ஸ் போராடி வென்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ் தியாபே ஆகியோர் மோதினர்.
தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை தியாபே கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார்.
இதேபோல் 3வது செட்டை தியாபேவும், 4வது செட்டை பிரிட்சும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது இவரது கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் இறுதிப்போட்டி ஆகும்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பிரிட்ஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொள்கிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்,
இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.
இதில் சின்னர் 7-5, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இறுதிப் போட்டி நடைபெறும்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, அமெரிக்காவின் டொனால்ட் யங்-டெய்லர் டவுன்செண்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
- முதல் செட்டை 1-6 என கரோலினா கைப்பற்றினார்.
- அடுத்த 2 செட்டுகளை ஜெசிகா வென்று அசத்தினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கரோலினா கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிபோட்டியில் சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு பெகுலா தகுதி பெற்றுள்ளார்.
Believe it, Jessica Pegula!
— US Open Tennis (@usopen) September 6, 2024
You're in a Grand Slam final! pic.twitter.com/4VYlp8GtPq
- பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா, எம்மா நவரோ மோதினார்.
- 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனையான எம்மா நவரோவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 7-6 (7/2) என்ற செட் கணக்கில் நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.
Aryna Sabalenka is pure entertainment, all the time.
— The Tennis Letter (@TheTennisLetter) September 6, 2024
This woman is great for tennis.
pic.twitter.com/aafH68oTZ7
- சின்னர் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.
- சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கால் இறுதி ஆட்டத்தில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.
இதில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 39 நிமிட நேரம் தேவைப்பட்டது.
சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார். 25-ம் நிலை வீரரான ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 10- வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 22 வயதான டிராப்பர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக்கும் ஜெசிகா பெகுலாவும் மோதின.
- இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இகா 2-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஜெசிகா பெகுலா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்