search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு: தந்தத்தால் செய்த ஆட்டக்காய் கிடைத்தது
    X

    கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு: தந்தத்தால் செய்த ஆட்டக்காய் கிடைத்தது

    • உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
    • கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.

    திருப்புவனம்:

    மதுரை அருகே உள்ள கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த அகழாய்வில் தந்தத்திலான ஆட்டக்காய் ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப் பகுதியையும் கொண்டுள்ளது. 1.5 செ.மீ. விட்டம் கொண்ட தலைப்பகுதியையும், 1.3 செ.மீ. விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. கருப்பு நிறத்தில் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.

    தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் மூலம் கீழடியில் மேம்பட்ட நாகரிகம் பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்ததற்கு சான்றாக இந்த ஆட்டக்காயை கருதலாம் என தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள்.

    Next Story
    ×