search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
    X

    லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

    அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Live Updates

    • 12 Oct 2024 5:44 PM IST

      கவரைப்பேட்டை ரெயில் விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம் புரண்ட அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றபட்டது. 9 பெட்டிகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த 2 பெட்டிகளும் தற்போது கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகளும், நாளை காலைக்குள் மற்ற 2 ரெயில் பாதைகளும் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

    • 12 Oct 2024 5:09 PM IST

      கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக 13 ரெயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார். கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி என 13 பேர் இன்று மாலை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • 12 Oct 2024 3:29 PM IST

      திருவள்ளூர்: கவரப்பேட்டையில் மைசூர் - தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்ட்ரலில் இருந்து புறப்படும் இரு ரயில்கள் தாமதமாகவும், மாற்று பாதையிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

      இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை - விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கும், காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும்

      இரு ரயில்களும் சூலூர்பேட்டை செல்லாமல் மாற்றுப்பாதையாக அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும்

    • 12 Oct 2024 1:56 PM IST

      கவரப்பேட்டை ரெயில் விபத்தில் சிக்கி தங்கள் உடமைகளை இழந்தவர்கள் அதனை பெற்றுள்கொள்ள ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ரெயில் நிலையம் சென்று தங்கம் உடமைகள் குறித்து அடையாளங்கள் கூறி பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 Oct 2024 1:50 PM IST

      கவரப்பேட்டையில் நடந்த ரெயில் விபத்தால் மற்ற ரயில்கள் தாமதமாகியுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம்.

    • 12 Oct 2024 12:52 PM IST

      கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை என்ற தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், என்ஐஏ விசாரணை நடைபெறவில்லை என ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

    • 12 Oct 2024 12:47 PM IST

       "ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே" - சு.வெங்கடேசன் எம்.பி.

    • 12 Oct 2024 12:34 PM IST

      கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து துரதிஷ்டமானது. ரெயில் விபத்துகள் நடக்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டியது அரசின் கடமை- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். 

    • 12 Oct 2024 12:31 PM IST

      விபத்து நடந்த இடத்தில் ரெயில் பெட்டிகள் அகற்றிய நிலையில் புதிய தண்டவாளங்கள் ரெயிலில் கொண்டுவரப்பட்டு புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • 12 Oct 2024 12:28 PM IST

      விபத்து குறித்து கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், " விரைவு ரெயில் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். காயமடைந்த 19 பேரும் முழு உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும்"என்றார்.

    Next Story
    ×