search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே வீச்சு- வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
    X

    சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே வீச்சு- வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

    • ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நந்தியாலம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.

    அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தனது பைக்கில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட கொள்ளையர்கள் தப்பியோடினர். இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குப் பின் பதில் அளித்தனர். விசாரணையில் அவர்கள் மாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது22), சர்மா (25), வாலாஜவை சேர்ந்த தருண் (20) என்பதும் இவர்கள் கடந்த 5-ந் தேதி இரவு தனியார் கல்லூரி முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் சீட் கவரில் இருந்து ஒரு செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாலிபர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து திருட முயன்றதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×