search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடலூர் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கியது
    X

    போலீஸ் பாதுகாப்புடன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி.

    வடலூர் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கியது

    • தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
    • போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் தொடங்கியது.

    போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகின்றது.

    Next Story
    ×