search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பெருத்த ஏமாற்றம்.. உக்ரைன் பலிகளுக்கு மத்தியில் ரஷியா சென்றுள்ள மோடியை கடுமையாக சாடிய ஜெலன்ஸ்கி
    X

    'பெருத்த ஏமாற்றம்'.. உக்ரைன் பலிகளுக்கு மத்தியில் ரஷியா சென்றுள்ள மோடியை கடுமையாக சாடிய ஜெலன்ஸ்கி

    • நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.
    • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பில் மோடியை புதில் காட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் அதிபர் புதினுடன் தேநீர் விருந்தில் அவரது இல்லத்தில் வைத்து மோடி உரையாடினார். பின்னர் மோடிக்கு முக்கிய பகுதிகளை புதின் சுற்றிக் காட்டினார்.

    சிறிது நேரம் கோல்ப் வண்டியில் இருவரும் பயணித்தனர். அதனபின் புதின் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் அவருடன் மோடி உணவருந்தினார். அதைத்தொடர்ந்து இன்று நடக்கும் மாநாட்டில் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில் மோடி ரஷியா சென்றுள்ளது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர். உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீதும் ரஷியா நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதளுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், மோடியின் ரஷிய பயணம் குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், 'இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று தெரிவிட்டுள்ளார். கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் மோடியும் ஜெலன்ஸ்கியும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×