search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நான் அமைதியாக இருக்க மாட்டேன்.. வெள்ளை மாளிகை வந்த நேதன்யாகுவிடம் கறார் காட்டிய கமலா ஹாரிஸ்
    X

    'நான் அமைதியாக இருக்க மாட்டேன்'.. வெள்ளை மாளிகை வந்த நேதன்யாகுவிடம் கறார் காட்டிய கமலா ஹாரிஸ்

    • அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

    பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம் குறித்தும் இதுவரை பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள் குறித்தும் அங்கு நிலவும் மனிதநேய சிக்கல் குறித்தும் எனது கவலையை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தக்குக்கு உடன்பட்டு இருதரப்பிலும் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இதற்கிடையில் இன்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை நேதன்யாகு சந்திக்க உள்ளார்.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 1,197 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்னும் 111 பேர் ஹமாஸிடம் பிணை கைதிகளாக உள்ளனர். ஹமாஸ் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    Next Story
    ×