search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸருடன் அறிமுகமான கேலக்ஸி S23 சீரிஸ்
    X

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸருடன் அறிமுகமான கேலக்ஸி S23 சீரிஸ்

    • சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று தனது புது ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
    • கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர்கள் உள்ளன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.6 இன்ச் FHD பிளஸ் டைனமிக் AMOLED 2x இன்ஃபினிட்டி ஒ ஃபிளாட் டிஸ்ப்ளே, 48 முதல் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

    புதிய கேலக்ஸி S23 மற்றும் S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கின்றன. இது மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள 3.2GHz கிளாக் வேகத்தை விட 3.36GHz கிளாக் வேகம் கொண்டிருக்கிறது. மேலும் இந்த முறை எக்சைனோஸ் பிராசஸர் கொண்ட வெர்ஷன்களும் அறிமுகம் செய்யப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் வேப்பர் சேம்பர் கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1, மூன்று கேமரா சென்சார்கள், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் புது கேலக்ஸி S23 சீரிஸ் இடம்பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் இந்த பாதுகாப்பு கிலாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் அம்சங்கள்:

    6.1 இன்ச் (S23) / 6.6 இன்ச் (S23 பிளஸ்) 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே

    48 முதல் 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ்

    கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி LPDDR5X ரேம், 128 ஜிபி (UFS 3.1) /256 ஜிபி (UFS 4.0) / 512 ஜிபி (UFS 4.0) மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, OIS

    12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

    10MP டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS

    12MP செல்ஃபி கேமரா, f/2.2

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E, ப்ளூடூத் 5.3

    S23 - 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    S23 பிளஸ் - 4700 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Qi வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

    புதிய சாம்சங் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஃபேண்டம் பிளாக், கிரீன், கிரீம் மற்றும் லாவண்டர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ப கிராஃபைட் மற்றும் லைம் நிறங்களும் வழங்கப்படுகின்றன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி S23 (8 ஜிபி ரேம், 128 ஜிபி) விலை 799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 495 என துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை 859.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 70 ஆயிரத்து 495 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி S23 பிளஸ் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரத்து 970 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 119.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 91 ஆயிரத்து 810 ஆகும்.

    இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×