என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ஜியோ சலுகை அறிவிப்பு
- ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய பிரீபெயிட் சலுகைகள் ஜியோ வலைதளம், மைஜியோ செயலிகளில் கிடைக்கிறது.
- புதிய சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.
இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ச்சியாக தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. இம்முறை ரிலையன்ஸ் ஜியோ இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 349 மற்றும் ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு சலுகைகளின் பலன்கள் அதிகளவு வேறுபடுகின்றன.
எனினும், இவற்றில் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றன. பலன்களை பொருத்தவரை அதிகபட்சம் 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்றன. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இரு சலுகைகளின் பலன்கள்:
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த பலன்களுடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
புதிய ஜியோ ரூ. 899 சலுகையிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ. 899 சலுகையில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 225 ஜிபி டேட்டா பெறலாம். இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையை போன்றே இதிலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும்.