search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கேலக்ஸி டேப் விலையை ரூ. 5 ஆயிரம் வரை குறைத்த சாம்சங்
    X

    கேலக்ஸி டேப் விலையை ரூ. 5 ஆயிரம் வரை குறைத்த சாம்சங்

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A8 மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு.
    • இந்திய சந்தையில் கேலக்ஸி A8 மாடலை சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

    சாம்சங் கடந்த ஆண்டு தனது கேலக்ஸி டேப் A8 ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டு வைபை மாடல்கள், இரண்டு எல்டிஇ மாடல்கள் என நான்கு வேரியண்ட்களில் கேலக்ஸி டேப் A8 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கேலக்ஸி டேப் A8 அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி டேப் A8 மாடலை சாம்சங் நிறுவனம் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட வைபை மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்தது. விலை குறைப்பை தொடர்ந்து இவற்றின் விலை தற்போது முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் A8 எல்டிஇ வெர்ஷனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை குறைப்புக்கு பின் இவற்றின் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் A8 அம்சங்கள்:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A8 மாடலில் 10.5 இன்ச் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஆக்டா கோர் பிராசஸர், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் ரெக்கார்டர் அம்சம், டல்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்பீக்கர், 7040 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×