search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    • அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    ஹுலுன்புயர்:

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 3வது ஆட்டத்தில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன், அரையிறுதிக்கும் முன்னேறியது இந்திய அணி.

    • ஏற்கனவே திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளனர்.
    • அலுவலகத்தில் வைத்து இருவரும் முத்தமிட்டு கொண்டது பிரச்சனையை உருவாக்கியது.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கு சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளனர். இதனை லியூவின் மனைவி கண்டுபிடித்துள்ளார். பின்னர் நிறுவனத்தின் மேனேஜரிடம் இது தொடர்பாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க லியூ விடுப்பு எடுத்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தபிறகு அலுவலகத்தில் வைத்து இருவரும் முத்தமிட்டு கொண்டது மீண்டும் பிரச்சனையை உருவாக்கியது.

    பின்னர் நிறுவன விதிகளை மீறியதாக இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். . இதனையடுத்து, பணிநீக்கத்தை எதிர்த்து இருவரும் தனித்தனியாக சுமார் ₹3 லட்சம் நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    • லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
    • அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    ஹுலுன்புயர்:

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.

    • அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது.
    • எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் தெரிவிக்கினர்.

    சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் [Zhejiang] பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா [Jinhua] நகரில் உள்ள யோங்காங் டேவே Yongkang Deway பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் [Huang] என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் [Immediate restoration] முறை இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகள் கடந்த சமூக வலைதளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிழந்தவரின் வயது வெளிப்படுத்தப்படவில்லை.

    இதுதொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அறுவை சிகிச்சை என்பதை விட எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் கூறியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறனர். 

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்கியது.
    • முதல் போட்டியில் சீனாவை இந்தியா வீழ்த்தியது.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்கியது.

    இத்தொடரில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சுக்ஜித் சிங், உத்தம் சிங், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    நாளை இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்துள்ளார் அபாவ்
    • தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது

    சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்ற ஊழியர் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 வயதான அபாவ் [A'bao] என்று நபர் கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங்[Zhejiang] மாகாணத்தில் உள்ள சோசவுன் [Zhoushan] பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு [2023] பிப்ரவரி மாதம் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்த அபாவ் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று மட்டுமே உடம்பு சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு தனது டார்மெண்ட்ரியில் [ஷேரிங் அறையில்] ஓய்வு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அபாவ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறலால் கடந்த ஜூன் 1 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

    அவரின் உயிரிழப்புக்குத் தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனமே காரணம் என்று அபாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அபாவின் உயிரிழப்புக்கு நிறுவனமும் 20 சதவீதம் காரணமாக உள்ளது என்று கூறிய நீதிமன்றம் அபாவின் குடும்பத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 யுவான் உட்பட மொத்தம் 400,000 யுவான்[இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47,000 லட்சம்] நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

    சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக வேலைப் பளு காரணமாக உயிரிழப்புகளும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மையும் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் அதிக வேலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கரோஷி எனப்படும் டிரண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

     

     

    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் இந்தக் கடிதங்களை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
    • சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

    பீஜிங்:

    சீனாவின் பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மிக மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்தக் கடிதங்களை நினைவுப் பொருளாக வைப்பதற்குப் பதில், அவற்றை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

    இதையடுத்து, மாணவர்கள் கடிதங்களைப் பரிசோதிப்பதை நிறுத்தும்படியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன சாதனைகளை பிரதிபலிக்கும் தனித்துவமான கலைப்பொருளாக பாதுகாக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியது.

    தங்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் பொருட்கள் எவ்வளவு நீடித்த மற்றும் நம்பகமானவை என்பதைக் காட்ட விரும்பவே இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
    • சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டன

    பிஜீங்:

    வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

    மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த கனமழையால் ஹுலுடாவ் நகரத்திற்கு குறிப்பாக ஜியான்ஜாங் மற்றும் சுய்சோங் மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள், பயிர்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன

    கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    • பாரீஸ் ஒலிம்பிக்ஸில் சோ யாக்கின் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
    • பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் கொடுத்த அப்பாவித்தனமான ரியாக்ஷனால் யாக்கின் வைரல் ஆனார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.

    18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


    • முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்.
    • லீ முசி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம், இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழமையான பரதக்கலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பரதக்கலை நாடு கடந்து சீனாவிலும் கால்பதித்துள்ளது.

    சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ முசி, பரதக்கலை பயின்று முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம் நடத்தி உள்ளார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய தூதர்கள், ஏராளமான சீன ரசிகர்கள் முன்னிலையில் மாணவி லீ முசி அரங்கேற்றம் செய்தார்.

    பரதம் பயிலும் ஒருவர், குறிப்பிட்ட தேர்ச்சிக்குப் பின்னர், மேடையில் ஆசிரியர்கள், நிபுணர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் முதன் முதலில் மேடையில் நடனம் ஆடுவதை அரங்கேற்றம் செய்தல் என்று குறிப்பிடுவார்கள். அரங்கேற்றம் நடத்திய பின்புதான், அவர்கள் தனியாக நிகழ்ச்சிகளில் நடனமாட முடியும் மற்றும் பயிற்சி வழங்க முடியும்.

    இதுகுறித்து இந்திய தூதரக கலாசார பொறுப்பாளர் டி.எஸ்.விவேகானந்த் கூறுகையில், "முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்" என்றார்.

    லீ முசியின் அரங்கேற்றம் சீன ஆசிரியரால் பயிற்சி அளிக்கப்பட்டு சீனாவிலேயே முடிக்கப்பட்டது, இது முதல் முறையாகும்.

    'இது பரதநாட்டிய மரபு வரலாற்றில் ஒரு மைல்கல்' என்று லீக்கு பயிற்சி அளித்த நடன கலைஞர் ஜின் ஷான் ஷான் கூறினார். லீ முசி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார். ஜின் 1999-ல் டெல்லியில் தனது அரங்கேற்றத்தை நடத்திய பரத கலைஞர் ஆவார்.

    அரங்கேற்ற விழாவில் பல பிரபலங்கள், சீன மாணவர்கள் முன்னிலையில் பல வரலாற்று சிறப்புமிக்க பாடல்களுக்கு 2 மணி நேரத்திற்கு மேல், லீ பரதம் ஆடினார். இந்த மாத இறுதியில் சென்னையிலும் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் லீ.

    • சீனாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.
    • மாயமான 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பீஜிங்:

    சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண் சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×