search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது
    X

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது

    • 9-ந்தேதி வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 13 மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அம்மனாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு்க்கான திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.

    விழாவையொட்டி நாடியம்மனுக்கு கடந்த மார்ச் 28-ந்தேதி காப்பு கட்டி வருகிற 4-ந் தேதி வரை மூலஸ்தானத்தில் இருந்து அன்று இரவு சீவிகாரோகண காட்சியுடன் அம்பாள் கடைத்தெருவில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. 5-ந்தேதியில் இருந்து தினமும் காலை, இரவு இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் அம்பாள் வீதி வலம் நடைபெறுகிறது.

    9-ந்தேதி இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் செட்டியார் தெருவில் வரகரிசி மாலை போடும் விழா நடைபெற உள்ளது. 10-ந்தேதி காலை பல்லக்கு, இரவு ஓலைச்சப்பரம், 11-ந்தேதி காலை புஷ்ப பல்லக்கில் நவநீத சேவை (வெண்ணெய் தாழி) இரவு குதிரை வாகனக்காட்சி நடைபெறுகிறது.

    12-ந்தேதி காலை நாடியம்மன் மூலஸ்தானம் (கோவில்) சென்று மாவிளக்கு மற்றும் காவடி திருவிழாவும் நடைபெறும். 13 மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். 15-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கில் நாடியம்மன் கோட்டைக்கு செல்லுதல் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு இன்னிசை கச்சேரி, நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×