search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நீச்சல் பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்... எப்போது செய்யக்கூடாது?
    X

    நீச்சல் பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்... எப்போது செய்யக்கூடாது?

    • தரையில் உடற்பயிற்சி செய்வதைவிட தண்ணீரில் நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது.
    • நீச்சல் பயிற்சி செய்யும் செய்யும் போது சில விஷயங்களை மறக்கக்கூடாது.

    நீச்சல் என்பது வெள்ளம் நேரத்தில் உயிரை காக்கும் ஒரு பயிற்சி மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் பயிற்சி என்பதால் அனைவரும் நீச்சலை பயின்று கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

    ஆனால் அதே நேரங்களில் ஒருசில நேரங்களில் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக காலி வயிற்றுடன் இருக்கும் போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது. அதேபோல் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது

    நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் மீட்பு நபர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீர் சுழற்சி முறையில் மாற்றம் இருக்கிறதா என்பதையும் கவனித்து நீச்சலடித்து செய்ய வேண்டும்

    தரையில் உடற்பயிற்சி செய்வதைவிட தண்ணீரில் நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது. குறிப்பாக நரம்பு மண்டலம் சீராகும் என்றும் நன்கு பசியெடுக்கும் தூக்கம் வரும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

    எனவே இதுவரை நீச்சல் தெரியாதவர்கள் உடனடியாக நீச்சல் பயிற்சியை செய்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் 200 கலோரிகளை எரிக்கும், அரை மணிநேரம் சைக்கிள் பயிற்சி செய்தால் 150 கலோரிகள் இருக்கும். ஆனால் அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் 350 கலோரிகளை எரிக்கும் என்பதால் நீச்சல் பயிற்சி மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும்.

    தினமும், அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது. நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைந்து, அமைதி ஏற்படும். அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.

    Next Story
    ×