search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும்...
    X

    மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும்...

    • மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை
    • கோதுமை உணவுகளை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம்.

    மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர்.

    மைதா வகை உணவுகளில் அதிக அளவு 'கிளைசெமிக் இன்டெஸ்' என்ற பொருள் இருப்பதால், இதனை அதிகம் எடுத்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அத்துடன் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன், இதய கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை என்பதால் மலசிக்கல் பிரச்சினை உண்டாகும். மைதா உணவுகளில் ஏராளமான ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் இருப்பதால் இவற்றை உட்கொள்ளும் போது செரிமான கோளாறு ஏற்படும்.

    இதனை தவிர்த்து கோதுமை உணவுகளை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம். இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இதய கோளாறு, ரத்த குழாய் அடைப்பு போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது என்பதால் இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×