search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    பலாப்பழம் சாப்பிட்ட பின்னர் கொட்டையை தூக்கி போடாதீங்க...
    X

    பலாப்பழம் சாப்பிட்ட பின்னர் கொட்டையை தூக்கி போடாதீங்க...

    • பலாப்பழ கொட்டைகளில் இரும்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
    • பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது.

    பலாப்பழத்தை போலவே அதன் கொட்டைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை. அதிலிருக்கும் தையமின் மற்றும் ரிபோ பிளேவின் போன்றவை சருமம், கண்கள், கூந்தலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த துணைபுரிகின்றன. சாப்பிடும் உணவுகளில் பாக்டீரியாக்கள் மூலம் பரவும் மாசுவை தடுக்கவும் உதவுகின்றன. செரிமான பிரச்சினைகளை போக்கும் தன்மை கொண்ட இவை பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்கும் பலாப்பழ கொட்டைகள் உதவுகின்றன.

    குளிர்ந்த பாலில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டைகளை சிறிது ஊற வைத்துவிட்டு விழுதாக அரைத்து சருமத்தில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் சரும சுருக்கம் நீங்கும்.

    சரும பளபளப்புக்கும் பலாப்பழ கொட்டைகளை பயன்படுத்தலாம். பலாப்பழ கொட்டைகளை சிறிதளவு பால் மற்றும் தேனில் ஊறவைத்து அரைத்து பசைபோல் ஆக்கி, முகத்தில் தடவி உலர வைத்து வெது வெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும்.

    பலாப்பழ கொட்டைகளில் புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதற்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க செய்வதிலும், கூந்தலின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது.

    பலாப்பழ கொட்டைகளில் இரும்பு சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. அது அன்றாடம் நமது உடலுக்கு தேவைப்படும் இரும்பு சத்தின் அளவை ஈடு செய்யும் தன்மை கொண்டது. மேலும் ரத்த சோகை மற்றும் ரத்தம் சார்ந்த நோய் பாதிப்பில் இருந்தும் காக்க உதவும். மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும்.

    பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. அது பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும். மாலைக்கண் பாதிப்பு வராமலும் காக்கும். முடி உதிர்வும் கட்டுப்படும்.

    ஜீரண கோளாறு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அளவோடு பலாப்பழ கொட்டைகளை சாப்பிடலாம். அதனை வெயிலில் நன்கு உலர்த்தி தூளாக்கி வேகவைத்து சாப்பிடலாம். இது மலச்சிக்கலை போக்கும்.

    பலாப்பழ விதைகளில் உயர்தர புரதங்களும் உள்ளன. அவை தசைகளின் வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகின்றன.

    Next Story
    ×