என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரி, ஒட்டப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
  X

  தருமபுரி, ஒட்டப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருசக்கர வாகனம் பெருமாள் மீது மோதியது.
  • சிகிச்சை அளிக்கப்பட்டும் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார் .

  நேற்று காலை தனது கடையிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தருமபுரி-சேலம் சாலையில் வந்த இருசக்கர வாகனம் பெருமாள் மீது மோதியது.

  இதில் பெருமாள் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×