என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரம் அருகே முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார்
  X

  ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமையில் புகார் மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

  பாவூர்சத்திரம் அருகே முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவில் இடத்திற்கான பட்டாவில் தனி நபர்களின் பெயரினை இணைத்து முறைகேடு செய்ததாக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலர் மீது தென்காசி தாசில்தாரிடம் ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோத பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

  இதில் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார்,செல்லப்பா மற்றும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×