search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில் தொடர் போராட்டம் எதிரொலி சாலை விரிவாக்க பணிக்காக மீண்டும் அளவீடு பணி:  கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு
    X

    சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு செய்யும் பணியை கோட்ட ெபாறியாளர் ஆய்வு செய்த காட்சி.

    நெல்லிக்குப்பத்தில் தொடர் போராட்டம் எதிரொலி சாலை விரிவாக்க பணிக்காக மீண்டும் அளவீடு பணி: கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு

    • பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.
    • புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    கடலூர்:

    கடலூர் - மடப்பட்டு சாலையில் 230 கோடி மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்து றையினரால் வரையப்பட்ட குறியீடுகள் வரை ஆக்கிரமி ப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்ததால் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அரசியல் கட் சியினர் மற்றும் சமூக அமைப்பினர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்ட கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, தனி தாசில்தார் (நில எடுப்பு) தமிழ்ச்செல்வி மற்றும் சர்வேயர் முன்னிலையில் நெல்லிக்குப்பம் வர சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணிகள் நடைபெற்றன. அப்போது ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் அரசு வரைபடம் மூலம் அளவீடு பணிகளில் ஈடுபட்டு குறியீடு வரையப்பட்டது. அப்போது ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சரியான முறையில் அளவீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதை அனைவரும் ஏற்று வரவேற்றனர். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிக்காக அரசிடம் இருந்து அனுமதி பெற்று அதற்கான நிதி பெற்று பணிகள் சரியான முறையில் அளவீடு செய்துசாலை விரிவாக்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் விபத்து இல்லாமலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன்படி அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து குறியீடு வரையப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பணி தொடங்கப்பட்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்றொருபுரத்திலும் உரிய முறையில் அளவீடு நடைபெற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×