search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில்  பருத்தி  செடியில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்   -விவசாயிகள் கோரிக்கை
    X

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பருத்தி செடியில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை

    • பல நூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடிகளில் நோய்தாக்குதல் காணப்படுகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா உட்பட்ட மணியம்பாடி சிந்தல் பாடி. ராமியணஅள்ளி கேத்திரெட்டிப்பட்டி தாளநத்தம் குருபர அள்ளி, தென்கரை க்கோட்டை,உள்ளிட்டபல கிராமங்களில் இந்த ஆண்டு பல நூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நடவு செய்து 50 நாட்களில் இருந்து 60 நாட்கள் ஆகிறது.தற்போது பூ பூத்து காய்காய்க்கும் பருவத்தில் செடிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவ நிலை மாற்றம் காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலையில் மூடுபனி, குளிர், பகலில் வெயில், மாலையில் சில்லென காற்று என உள்ளது. இதனால் பருத்தி செடிகளில் நோய்தாக்குதல் காணப்படுகிறது.

    கடத்தூர், தாளநத்தம்.கேத்து ரெட்டிபட்டி உட்பட சில கிராமங்களில் அசுவினி மற்றும் இலை சுருட்டல் நோய் தாக்கி செடிகள் இழைகள் காய்கின்றன.

    சில கடைகளில் மருந்து கம்பெனிக்காரர்கள் கொடுக்கும் மருந்தினை செடிகளுக்கு தெளிக்கும் நிலை உள்ளது.

    பாப்பிரெட்டி பட்டி,மொரப்பூர் பகுதிக்கு உட்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்தி வயல்வெளிகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×