என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சையில், தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர் பங்கேற்பு
  X

  தஞ்சையில், அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  தஞ்சையில், தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வந்தனர்.
  • பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  தஞ்சாவூா்:

  முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 54-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

  இதனை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்டம் மாநகர தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஏராளமானோர் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வந்தனர்.

  பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  பின்னர் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மருத்துவர் அணி துணை செயலாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், பகுதி செயலாளர்கள் மேத்தா,சதா சிவம், கார்த்திகேயன், நீலகண்டன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×