search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஆய்வு
    X

    ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஆய்வு

    • ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    Next Story
    ×