search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி உற்சவ விழா
    X

    மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வல்லபை மஞ்சமாதா.

    நவராத்திரி உற்சவ விழா

    • ராமநாதபுரம், ரகுநாதபுரம் கோவில்களில் நவராத்திரி உற்சவ விழா நடந்தது.
    • கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்களும் வல்லபை மஞ்சமாதா பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வல்லபை கொலு மண்டபத்தில் பள்ளி மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    விஜயதசமியை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு வல்லபை மஞ்ச மாதாவிற்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி புறப்பாடு நடந்தது.

    கோவில் முன்பு உள்ள திடலில் வில்லில் இருந்து அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்தார்.

    ராமநாதபுரம் சமஸ்தா னம் அரண்மனை வளா கத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா தொடங்கியது.

    விழாவையொட்டி அம்மன் காமதேனு, சிம்மம், ரிஷபம் ஆகிய வாகனத்தில் அருள் பாலித்தார். நேற்று விஜயதசமியை முன்னிட்டு இரவு அம்மன்தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி பரிவார தெய்வங்களுடன் கேணிக்கரை ரோட்டில் உள்ள மகர் நோன்பு திடலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அசுரன் மீது அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், வன சங்கரியம்மன் கோவில்களில் அம்மன் அலங்காரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னிகா பரமேஸ்வரி கோவில், மகா சக்திநகர் மாரியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன் கோவில், பிள்ளைக்காளியம்மன் கோவில், கலெக்டர் அலுவலக வளாகம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு நடந்தது.

    அழகன் குளம் ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    Next Story
    ×