search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டு நிறுவனங்கள், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்-அமைச்சர் அறிவுறுத்தல்
    X

    இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா அருணாசலம் மற்றும் பலர் உள்ளனர்.

    தொண்டு நிறுவனங்கள், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்-அமைச்சர் அறிவுறுத்தல்

    • சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
    • இதன் திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

    இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும், அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையிலும் விளையாட்டு அடிப்படையாக அமைகிறது. அந்த விளையாட்டை கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பெறுவதற்கு ஏதுவாக அரசுடன் இணை ந்தும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு நிதி ரூ.13.56 லட்சமும், பங்களிப்பு நிதியாக ரூ.13.50 லட்சமும் என மொத்தம் ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம மக்களுக்கு பயனுள்ள வகையிலும், அருகிலுள்ள கிராமப்புறப்பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயனுள்ள வகையிலும், உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று கிராமப்புற பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசுடன் இணைந்து, மக்கள் பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சேக்கப்ப செட்டியார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஸ்வாி கண்ணன். ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், வட்டாட்சியர் தங்கமணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்ப பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×