என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேவகோட்டையில் இருந்து காவடி எடுத்து செல்லும் பக்தர்கள்
  X

  தேவகோட்டை பக்தர்கள் காடிகள் எடுத்து இன்று காலை திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதியில் சென்றனர்.

  தேவகோட்டையில் இருந்து காவடி எடுத்து செல்லும் பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தேவகோட்டையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.
  • தேவகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர்.

  தேவகோட்டை

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு காவடிகள் எடுத்து பழனி முருகன் ேகாவிலுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 5-ந் தேதி நடைபெற இருப்பதால் தேவகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர். இன்று காலை அவர்கள் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதி வழியாக பழனி நோக்கி சென்றனர்.

  தங்களது முன்னோர்கள் காட்டிய வழியில் ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையை தொடருவார்கள். இரவில் வழியில் தங்கி செல்வார்கள். அவர்களுக்கு ஆங்காங்கே கிராமமக்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த பக்தர்கள் தைப்பூச தினத்தன்று பழனியை சென்றடைந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பாதயாத்திரையாகவே தங்களது வீடுகளுக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×