search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

    • முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நாமக்கலில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 500 காசுகளாக இருந்த முட்டை விலை, 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை, படிப்படியாக அதிகரித்து இன்று 505 காசுகளாக இருப்பதால் ஒரே மாதத்தில் முட்டை விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருப்பது முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    கறிக்கோழி விலை 127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் நீடிக்கும் என பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×