search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குந்தவை நாச்சியார்அரசு மகளிர் கல்லூரியில் முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கியது
    X

    குந்தவை நாச்சியார்அரசு மகளிர் கல்லூரியில் முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கியது

    • பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
    • மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 - 24 ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மலா்விழி கூறியதாவது:-

    இக்கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

    நாளை காலை 9 மணிக்கு பி.எஸ்.ஸி. கணினி அறிவி யல், பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 3 ஆம் தேதி 9 மணிக்கு பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    இதேபோல, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    இக்கலந்தாய்வுக்கு மாணவிகள் குறித்த நேரத்தில் கட்டாயம் வர வேண்டும். வரும் போது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்களை மாணவிகள் எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×