என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செல்போன் டவரில் பேட்டரி திருடியவர் கைது
  X

  செல்போன் டவரில் பேட்டரி திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாக்கு மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
  • அந்த நபரை பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  சூலூர்,

  சூலூர் அருகே பட்டணத்தில் செல்போன் டவர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்போன் டவர்களை கண்காணிக்கும் பணியினை தங்கராஜ் கவனித்து வருகிறார். இவர் வழக்கம்போல் செல்போன் டவர்களை பார்த்துவிட்டு பட்டணம் வந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

  உடனே அவரை நிறுத்தி சாக்கு மூட்டையில் என்ன இருக்கிறது என சோதனை செய்தார். சோதனையில் செல்போன் டவரில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை திருடி சாக்கு மூட்டையில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபரை பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் பேட்டரி திருடியவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி தென்கரை மாதா கோயில் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜெட்லி (வயது27) என தெரிய வந்தது. இதனையடுத்து சூலூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×