என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் வெளிமாநில மதுபாக்கெட்டுகள் கடத்தல்
    X

    பஸ்சில் வெளிமாநில மதுபாக்கெட்டுகள் கடத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகன தணிக்கையில் ஒருவர் சிக்கினார்
    • போலீசார் கைது செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப் பாதை சந்திப்பில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாம லைக்கு வந்த அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப் போது பஸ்சில் சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகை யில் ஒருவர் 3 கட்டை பைகளுடன் அமர்ந்து இருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கொளப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 350 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×