என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் 2 உயர் கோபுர மின் விளக்கு
- ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்டது
- திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி 5 கண் பாலம் மற்றும் புதிய பஸ் நிலையம் செல்லும் சந்திப்பில் உயர் மின் கோபுரம் பல ஆண்டுகளாக இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 2 உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதியதாக அமைக்கப்பட்ட 2 உயர் மின் விளக்குகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர் கணேஷ் குமார்,மச்சேந்திரன், வரதன், சக்திவேல் ராமஜெயம் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story