என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூரில் லாரி மோதி தொழிலாளி பலி
- வேலைகள் முடித்து கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
- மண்ணிவாக்கம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வண்டலூர்:
படப்பை அடுத்த அம்பனாம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது48). தாம்பரம் கிஷ்கிந்தா அருகில் இஸ்திரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா. நேற்று இரவு வேலைகள் முடித்து கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
மண்ணிவாக்கம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியில் சிக்கிய வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். உஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தனது கண்முன் கணவர் வெங்கடேசன் பலியானதை கண்டு உஷா கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story