என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இழுப்பீடு தொகையை உயர்த்தி கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம்
  X

  கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் வந்த சென்ன சமுத்திரம் பகுதி மக்கள்.

  இழுப்பீடு தொகையை உயர்த்தி கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலாஜா சுங்க சாவடி நில எடுப்பு விவகாரம் ெதாடர்பான விசாரணை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  வேலூர்:

  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சங்குசாவடி விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது.

  இதற்காக சென்ன சமுத்திரம் பகுதியில் சுமார் 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலத்தின் உரிமையாளர்கள் சுமார் 60 பேர் தங்களுக்கு நிலத்தின் இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

  ஆனால் நிலத்திற்கு குறைந்த இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் தொடரப்பட்டது.

  இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது நிலத்திற்கு அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே 2019-ம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

  அப்போது அவர்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் உங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக் கொடுங்கள்.

  அதை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினர்.

  இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் கூறுகையில்:- மற்ற இடங்களில் சுங்கச்சாவடிக்கு நிலம் கையகப்ப டுத்தப்படும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் வாலாஜா சுங்க சாவடிக்கு மட்டும் குறைந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.

  எனவே உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

  Next Story
  ×