என் மலர்
உண்மை எது
உண்மை எது: இஸ்ரேல்-லெபனான் எல்லை தாண்டும் சம்பவம் தற்போது நடந்ததா?
- எல்லையை கடக்க முயலும் மக்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி முன்னேறினர்
- 25 அடி உயர முட்கம்பியை சேதப்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்தனர்
கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பாலஸ்தீன மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் கொடிகளை கைகளில் வைத்திருக்கும் ஒரு கும்பல், கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேல் எல்லை பகுதியை கடந்து உள்ளே செல்ல முயல்வது தெரிந்தது. அந்த வீடியோவுடன் இணைக்கப்பட்ட செய்தி குறிப்பில் பாலஸ்தீனத்தை காக்க இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் இஸ்ரேலுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆய்வில் இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது.
உண்மை என்னவென்றால் இதில் காணப்படும் சம்பவம் தற்போது இஸ்ரேல்-காசா போர் நடைபெறும் காலகட்ட சம்பவமே அல்ல.
2021 வருடம், லெபனான் நாட்டை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காசா பகுதி மக்களின் உரிமைகளுக்காக லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உள்ள 25 அடி உயர முட்கம்பி வேலியை பல உபகரணங்களால் அறுத்து, இஸ்ரேலி எல்லைப்படை வீரர்கள் மேல் கற்களை எறிந்து, கையெறி குண்டுகளை வீசி உள்ளே நுழைய முயற்சித்த போது எடுக்கப்பட்டது.
2021ல் நடைபெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, தவறாக 2023 அக்டோபர் மாத சம்பவமாக வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.