search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    நவக்கிரக எளிய பரிகாரங்கள்
    X

    நவக்கிரக எளிய பரிகாரங்கள்

    • ஓடும் நீரில் சிவப்பு பூக்களை செவ்வாய்கிழமைகளில் விடுவது சிறப்பு.
    • செவ்வாய் ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருப்பது நல்ல பலன் தரும்.

    சூரியன்:

    தந்தை மற்றும் வயதான ஆண்களை மதிக்கவும். அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும். முதலாளி மற்றும் மேலதிகாரியிடம் வாக்கு வாதம் கூடாது. மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை உப்பு கலவாத உணவை உண்பது நல்ல பலன் தரும். சூரிய ஓரையில் சாப்பிடாமலும் தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் நல்லது.

    சந்திரன்:

    தாய் மற்றும் வயதான பெண்களுக்கு மரியாதை பணிவிடைகள் செய்யவேண்டும். தாயிடம் வெள்ளி நாணயம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கி உடன் வைத்துக்கொள்ள அதிர்ஷ்டம் உண்டாகும். ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை தினமும் சொல்லிவரவும். திங்கட்கிழமைகளில் ஓடும் நீரில் வெள்ளைப்பூக்களை விடுவது நல்ல பலன் தரும். வெள்ளி பாத்திரங்களில் நீர் அருந்துவது சிறப்பு. சூரிய அஸ்தமனம் ஆனபிறகு பாலை குடிக்க கூடாது. பாதுகாப்பு பணியில் உள்ள ஏழைகளுக்கு உதவிசெய்தல் நல்லது

    செவ்வாய்:

    இளையவர்களை மதிக்கவும். இனிப்புக்களை தானமாக வழங்குவதும் தானும் சாப்பிடுவதும் நல்லது. ரத்த தானம் செய்வது சிறப்பு. சிவப்பு உணவுகளை சாப்பிடுவது நன்று. ஓடும் நீரில் சிவப்பு பூக்களை செவ்வாய்கிழமைகளில் விடுவது சிறப்பு. செவ்வாய் ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருப்பது நல்ல பலன் தரும்.

    புதன்:

    12 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் படிப்புக்கு தேவையான பொருட்களை தானம் செய்வது சிறப்பு.

    குரு:

    சந்தனம் குங்குமம் நெற்றியில் வைக்கவும். வியாழன் அன்று 12 மஞ்சள்நிறப்பூக்களை ஓடும் நீரில் விடவும். குரு ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமல் இருப்பதும் நல்ல பரிகாரம்.

    சுக்கிரன்:

    மனைவி மற்றும் இளம்பெண்களை மதிக்கவும். மாடுகளுக்கு உணவு வழங்கவும். கிழிந்த ஆடைகளை பயன்படுத்த கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்தவும்.

    சனி:

    பொய் சொல்லக்கூடாது. ஒழுக்கம் மிக முக்கியம். ஒரு ஆண்டு காலத்தில் குறைந்த பட்சம் பத்து பார்வை அற்றவர்களுக்கு உணவளிப்பது நல்லது. கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கவும். சனிக்கிழமை ஓடும் நீரில் கைப்பிடி கருப்பு உளுந்தை விடவும். பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்கவும். சனி ஓரையில் சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருப்பது நல்லது.

    -ஜோதிடர் ராஜலெட்சுமி

    Next Story
    ×