search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கு தேச பெண் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஒய்.எஸ்.ஆர். காங். எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகன்ரெட்டி மீது அதிருப்தி
    X

    தெலுங்கு தேச பெண் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஒய்.எஸ்.ஆர். காங். எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகன்ரெட்டி மீது அதிருப்தி

    • தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் அனுராதா எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார்.
    • வேட்பாளரின் எதிர்பாராத வெற்றி ஆளும் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் காலியாக உள்ள 7 எம்.எல்.சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த 7 இடங்களில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர்.

    மீதமுள்ள ஒரு இடத்தில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் அனுராதா எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 23 எம்.எல்.ஏ.க்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் என 41 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.

    தெலுங்கு தேசம் வேட்பாளர் அனுராதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உள்ள அதிருப்தியால் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

    தெலுங்கு தேச வேட்பாளரின் எதிர்பாராத வெற்றி ஆளும் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் குறித்து நடத்திய விசாரணையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாராயணரெட்டி, கோட்டம் ரெட்டி, ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் வாக்களித்தது தெரியவந்தது. மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் யார் என விசாரணை நடந்தது வருகிறது.

    இன்னும் ஒரு ஆண்டில் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கு தேசம் எம்எல்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தது தெலுங்கு தேசம் கட்சியினரை உற்சாகபடுத்திஉள்ளது.

    மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளை ஆளுங்கட்சியால் தீர்த்து வைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர்.

    வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என அவர்கள் ஆரவாரித்தனர்.

    தற்போது எம்எல்ஏக்களாக உள்ள பெரும்பாலானோருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என கூறப்படுகிறது. எனவே தான் 5 எம்.எல்.ஏ.க்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×