search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் லஞ்சம் வாங்கியதாக வக்கீல் மீது வழக்கு- ஐகோர்ட்டு பதிவாளர் நோட்டீசை தொடர்ந்து நடவடிக்கை
    X

    கேரளாவில் லஞ்சம் வாங்கியதாக வக்கீல் மீது வழக்கு- ஐகோர்ட்டு பதிவாளர் நோட்டீசை தொடர்ந்து நடவடிக்கை

    • கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களிடம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் எனக்கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
    • வக்கீல் ஷைபி ஜோஸ் கிடங்கூரிடம் கேரள பார் கவுன்சிலும் விளக்கம் கேட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகியாக இருப்பவர் ஷைபி ஜோஸ் கிடங்கூர்.

    இவர், கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களிடம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் எனக்கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள் சிலர் அளித்த புகார் மனுவை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கேரள ஐகோர்ட்டு பதிவாளர், போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதினார்.

    கேரள ஐகோர்ட்டு பதிவாளர் அளித்த கடிதத்தை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் இந்த புகார் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து வக்கீல் ஷைபி ஜோஸ் கிடங்கூர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே வக்கீல் ஷைபி ஜோஸ் கிடங்கூரிடம் கேரள பார் கவுன்சிலும் விளக்கம் கேட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் கவுன்சிலின் கண்காணிப்பு பிரிவு அறிக்கை அளித்துள்ளது.

    Next Story
    ×