search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்
    X

    சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்

    • சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வருகிற நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
    • அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வருகிற நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதற்கிடையே வழக்கமான நடைமுறையில் ஒரு பகுதியாக அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியது.

    இதுகுறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் டுவிட்டரில் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் இன்று தலைமை நீதிபதிக்கு அடுத்து தலைமை நீதிபதியை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை செய்ய கடிதம் அனுப்பினார் என்று தெரிவித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    Next Story
    ×