என் மலர்
இந்தியா

ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
- சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் அங்குள்ள குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வேதா என்ற மனைவியும், நிஷிகேத் (வயது 9), நிஹல் (5) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சை அளித்தும் குணமாகாததால் சதீஷ் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Next Story