search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அணையில் விழுந்த செல்போன் - 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக வெளியேற்றிய அதிகாரி
    X

    அணையில் விழுந்த செல்போன் - 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக வெளியேற்றிய அதிகாரி

    • நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.
    • செல்போனை எடுப்பதற்காக கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை அதிகாரி வெளியேற்றினார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.

    சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுக்க அவர் முயற்சி மேற்கொண்டார். அணையில் இறங்கி செல்போனை தேடும்படி உத்தரவிட்டார். ஆனாலும் செல்போன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து, அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி வந்தார். கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை வெளியேற்றினார். இறுதியில் செல்போன் கிடைத்தது. ஆனாலும் அது வேலை செய்யவில்லை.

    செல்போனுக்காக அணையின் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியின் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ராஜேஷ் விஸ்வாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி அமர்ஜித் பகத் தெரிவித்தார்.

    இந்நிலையில், அணையின் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா ஷுக்லா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×