search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஆட்சியில் இருப்பவர்கள் செயல்பட்டுகிறார்கள்- ரவி பச்சமுத்து
    X

    தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஆட்சியில் இருப்பவர்கள் செயல்பட்டுகிறார்கள்- ரவி பச்சமுத்து

    • இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.
    • ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது பிஜேபி அல்ல காங்கிரஸ் எனவும், குறிப்பாக ப.சிதம்பரம்தான் அதைத் தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து விருதுவிளங்கினான் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவின் புகழைப் பரப்ப வேண்டும் என்று பாடுபட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், பொருளாதாரத்தில் இந்தியாவை மேலும் முன்னேற்ற முயற்சித்து வருவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாடு தனித்தீவு போலவும், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், பாரதம் என்ற ஒன்றே இல்லாதது போலவும் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    அதனை தொடர்ந்து, சு.வாழாவெட்டி கிராமத்தில் பேசிய ரவி பச்சமுத்து, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனவும், ஊழலுக்கு எதிராக ஊழல் கட்சிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இங்கு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், தமிழ் என்று சொல்கிறார்களே தவிர, பிரதமர் மோடியை போலவும் டாக்டர் பாரிவேந்தரைப் போலவும் யாரும் செயல்படவில்லை என்று விமர்சித்தார். சென்னை அருகே ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியதாகவும், பல்வேறு தொகுப்பு வீடுகள், சோலார் மின்சாரம் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். டாக்டர் பாரிவேந்தர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஒரே சிந்தினை உடையவர்கள் எனவும் தெரிவித்தார்.

    அதேபோல் கல்லேரி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது பிஜேபி அல்ல காங்கிரஸ் எனவும், குறிப்பாக ப.சிதம்பரம்தான் அதைத் தொடங்கி வைத்தார் எனவும் குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடிக்கும், பாரிவேந்தருக்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளது எனவும், இருவருக்கும் ஒரே எண்ணங்கள், ஒரே கொள்கைகள் உள்ளதாகவும் கூறினார். மேலும், டாக்டர் பாரிவேந்தர் ஒரு விவசாயின் மகன் எனவும், தனி ஒருவராக சென்னைக்கு சென்று நேர்வழியில் படித்து, மற்றவர்களுக்கும் கல்வி மற்றும் பல்வேறு தொழில்களை கொடுத்து, ஒரு ஆசிரியராக இருந்தவர் என புகழாரம் சூட்டினார்.

    இதனையடுத்து வலசை கிராமத்தில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து டாக்டர் ரவி பச்சமுத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய மொழியில் தமிழ் மொழியும் முக்கியமானவை என்றும், உலகத்தை தமிழர்கள்தான் ஆள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் தமிழர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறார்கள் எனவும் தேசியத்தை நோக்கியும் பொருளாதரத்தை நோக்கியும் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×