என் மலர்
உலகம்

அரசாங்க செல்போன்களில் டிக்டாக் செயலி வைத்திருக்கக்கூடாது... தடை விதித்தது பிரிட்டன்
- இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
லண்டன்:
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் பிரிட்டனிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக செல்போன்களில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாராளுமன்றத்தில் மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக செல்போன்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
Next Story