என் மலர்
கணினி
- வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
- ஐஒஎஸ் பயனர்களிடையே சிறிய வீடியோ நோட் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாற்ற முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய அப்டேட் டெஸ்க்டாப் தளத்திற்கானது ஆகும். இதைத் தொடர்ந்து தற்போது பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.
வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புதிய அம்சம் பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை அழிப்பதற்கு மாற்றாக அதில் ஏற்பட்ட பிழையை மட்டும் சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும். அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு தற்போது 15 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்து கொள்ள வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டு இருக்கும் டெலிட் அம்சத்திற்கு மாற்றாக, புதிய அம்சம் இருக்கும். டெலிட் அம்சம் குறுந்தகவலை முழுமையாக அழிக்கச் செய்து வேறொரு தகவலை அனுப்ப உதவி வருகிறது. புதிய அம்சம் குறுந்தகவல்களை அழிக்காமல், அதில் சிறு மாற்றங்களை மேற்கொள்ளச் செய்கிறது. இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் என இருவருக்கும் தகவல் இடம்பெற்று இருக்கும்.
புதிய அம்சம் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த அம்சம் ஐஒஎஸ் பயனர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.
இதுதவிர வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஞ்ச் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 நொடிகளுக்கு சிறிய வீடியோ நோட்களை அனுப்பலாம். டெலிகிராமில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ நோட் போன்றே வாட்ஸ்அப்-இல் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.
- விங்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் கேம் மோட், 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ கொண்டிருக்கிறது.
- புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 மாடல் வைட் மற்றும் பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.
விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபேண்டம் 380 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. ANC மோடில் இந்த இயர்பட்ஸ் 35 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள குவாட் மைக் ENC-இல் நா்கு மைக்குகள் உள்ளன. இவை எவ்வித சூழலில் இருந்து பேசினாலும், மற்றவர்களுக்கு குரல் தெளிவாக கேட்க செய்கிறது.
புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 மாடலில் ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க், ஒபன் அண்ட் ஆன், கேம் மோட், 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ, 13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்கள், போல்டு பேஸ் மற்றும் ENC மைக்குகள் உள்ளன. புதிய இயர்பட்ஸ் மூலம் விங்ஸ் நிறுவனம் ஆஃப்லைன் தளத்தில் கால்பதிக்கிறது.

விங்ஸ் ஃபேண்டம் 380 அம்சங்கள்:
எர்கோனோமிக் டிசைன்
13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசைட் டிரைவர்
டிரான்ஸ்பேரண்ட் மோடில் அதிகபட்சம் 30db வரையிலான ANC
போல்டு பேஸ் தொழில்நுட்பம்
40ms அல்ட்ரா லோ லேடன்சி வழங்கும் பிரத்யேக கேம் மோட்
குவாட் ENC மைக்ரோபோன்
டச் கண்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க்
அதிகபட்சம் 50 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி
டைப் சி புல்லட் ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட்
IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்
விங்ஸ் சின்க் ஆப் சப்போர்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விங்ஸ் ஃபேண்டம் 380 மாடல் அறிமுக சலுகையாக பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது.
- புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிகபட்சம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 197 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா (தினமும் 2 ஜிபி), 100 எஸ்எம்எஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பலன்களை பொருத்தவரை இந்த சலுகை தினசரி கட்டணம் ரூ. 2.80 என கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.
- நத்திங் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
- நத்திங் இயர் (2) மாடல் இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இரண்டாவது தலைமுறை இயர் (2) இயர்பட்ஸ்-ஐ இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த இயர்பட்ஸ்-க்கான குறுகிய கால விற்பனையை நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
குறுகிய கால விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைத்தளங்களில் நாளை (மார்ச் 25) மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இதுதவிர மார்ச் 28 ஆம் தேதி இதன் விற்பனை துவங்க இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் அதன் முந்தைய மாடலை போன்றே டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதுதவிர இந்த மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நத்திங் இயர் (2) மாடலில் உள்ள 11.6mm கஸ்டம் டிரைவர், புதிய டூயல் சேம்பர் டிசைன் ஒட்டுமொத்த சவுண்ட் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் அதிகபட்சம் 40db நாய்ஸ் ரிடக்ஷன், ஸ்மார்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், மேம்பட்ட விண்ட் ப்ரூஃH் மற்று்ம கிரவுட் ப்ரூஃப் க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த வாரம் துவங்க இருக்கும் விற்பனைக்கு முன்பே நத்திங் இயர் (2) மாடலை வாங்க விரும்புவோர் நாளைய சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய நத்திங் இயர் (2) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் புளூ சந்தா முதற்கட்டமாக உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
- உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டரில் பழைய வெரிஃபைடு திட்டம் நிறுத்தப்படுகிறது.
ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட டுவிட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகி விட்டது. புதிய அப்டேட்டின் மூலம் டுவிட்டர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு செக்மார்க் நீக்கப்படுகிறது.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாற்றங்களின் படி டுவிட்டர் புளூ சந்தா பயனர்களுக்கு ஏராளமான அம்சங்களை பிரத்யேகமாக வழங்குகிறது. இதில், வெரிஃபைடு செக்மார்க், டுவிட் உரையாடல்களுக்கு முன்னுரிமை, குறைந்த விளம்பரங்கள், புக்மார்க் ஃபோல்டர்கள், நேவிகேஷனை கஸ்டமைஸ் செய்யும் வசதி, டுவிட்களை எடிட் மற்றும் அண்டு செய்யும் வசதி இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் அதிகபட்சம் 4 ஆயிரம் எழுத்துக்களில் டுவிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக டுவிட்டர் புளூ சந்தா உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. தற்போது உலகம் முழுக்க டுவிட்டர் புளூ சந்தா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகளவில் டுவிட்டர் புளூ வெளியாகி இருப்பதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்துகிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளின் கீழ் வெரிஃபைடு வழங்கப்பட்டு இருந்தது.
- Vu நிறுவனத்தின் 2023 ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
- புதிய ஸ்மார்ட் டிவி-க்களில் கூகுள் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய சந்தையில் முன்னணி டிவி உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் Vu டெலிவிஷன்ஸ் நிறுவனம் Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவை Vu GloLED டிவிக்களை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய மாடல்கள் ஆகும். புதிய ஸ்மார்ட் டிவிக்களில் மேம்பட்ட அம்சங்கள், பிரைட் ஸ்கிரீன் மற்றும் தலைசிறந்த சவுண்ட் வெளிப்படுத்துகின்றன.
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன்
2023 Vu பிரீமியம் டிவி மாடல் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கின்றன. இவை அனைத்து விதமான அறைகளிலும் எளிதில் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் A+ கிரேட் 400 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல்கள், 50 வாட் சவுண்ட்பார் மற்றும் டால்பி ஆடியோ வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த டிவியில் மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன், முன்புறம் பார்த்த நிலையில், கீழ்புறத்தில் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஸ், வாய்ஸ் ரிமோட் உடன் கொண்டிருக்கிறது. Vu ஆக்டிவாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல்-இல் பில்ட்-இன் மைக்ரோபோன் உள்ளது. இது கூகுள் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
இத்துடன் புதிய ரிமோட் பிக்சர், சவுண்ட் உள்ளிட்டவைகளுக்கு ஹாட்கீ கொண்டிருக்கிறது. இதில் 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 4-கோர் சிபியு, சக்திவாய்ந்த ஜிபியு, 16 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் அம்சங்கள்:
மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன்
43 இன்ச் மற்றும் 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K LED டிஸ்ப்ளே
டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன், டைனமிக் காண்டிராஸ்ட், கேம் மோட்
64 பிட் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
கூகுள் டிவி
ஆக்டிவாய்ஸ், ஹாட்கீ ரிமோட்
வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0, 3x HDMI, 2x USB, S/PDIF, AV இன்புட், 1x ஈத்தர்நெட்
50 வாட் அவுட்புட், டால்பி ஆடியோ
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் 43 இன்ச் மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் மாடலின் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. ஆன்லைன் மட்டுமின்றி இவற்றின் விற்பனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது.
- உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
- வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய வசதியை வழங்கும் அப்டேட் வெளியாகி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் அட்மின்கள் நிர்வாகம் மற்றும் நேவிகேட் செய்வதை எளிமையாக்கும் க்ரூப் அப்டேட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய அப்டேட் க்ரூப்-இல் யார் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதோடு, நீங்கள் எந்த க்ரூப்களுடன் பகிர்ந்து கொள்கின்றீர்கள் என்பதை எளிமையாக்குகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களுடன் புதிய அப்டேட்கள் இணைகின்றன. இதில் க்ரூப் அளவு உயர்த்தியது, மெசேஞ்ச் டெலீட் செய்யும் அம்சம் உள்ளிட்டவை அடங்கும்.

அட்மின்களுக்கு கூடுதல் கண்ட்ரோல்:
புதிய அப்டேட் மூலம் அட்மின்கள் யார் க்ரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மாணிக்கலாம்.
இதோடு ஏதேனும் காண்டாக்ட் பெயரை க்ளிக் செய்தால், எந்த க்ரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்டு மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் க்ரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.
புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்பட இருக்கிறது. இதுதவிர க்ரூப்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் 13MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
- 9510 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒப்போ டேப்லெட் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் ஒப்போ பேட் மூலம் கடந்த ஆண்டு டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் ஒப்போ பேட் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் சீனாவில் புதிய ஃபைண்ட் X6 மற்றும் ஃபைண்ட் X6 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
புதிய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ பேட் 2 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஒப்போ பேட் 2 மாடலில் 11.61 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, டால்பி விஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2800x2000 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், 13MP பிரைமரி கேமரா, 4K வீடியோ வசதி, 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

ஒப்போ பேட் 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பிராசஸர் விவோ பேட் 2 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாத வாக்கில் இந்த டேப்லெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புதிய ஒப்போ பேட் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13 ஃபார் பேட் 13 வழங்கப்பட்டு இருக்கிறது. 9510 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒப்போ பேட் 2 மாடல் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வைபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது. ஒப்போ பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்-இன் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.
விலை விவரங்கள்:
சீன சந்தையில் ஒப்போ பேட் 2 விலை 2 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரத்து 061 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 3 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 071 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி துவங்குகிறது. இதன் சர்வதேச வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
- கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பெரிய டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
- புதிய கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கிறது.
கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 'வோக்' ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் HD டிஸ்ப்ளே, 91 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, ஸ்ப்லிட் ஸ்கிரீன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பிரீமியம் தோற்றம் கொண்ட மெட்டல் கேசிங், சதுரங்க வடிவம் கொண்ட டயல் உள்ளிட்டவை இந்த வாட்ச்-ஐ அழகாக காட்சியளிக்கச் செய்கின்றன.
இதில் உள்ள ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்டவை அதிகப்படியான சூரிய வெளிச்சங்களிலும் ஸ்கிரீனை சிரமம் இன்றி பார்க்க செய்கிறது. இத்துடன் பயனர்களுக்கு 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் எளிய நேவிகேஷன் வசதியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கிஸ்மோர் வோக் அம்சங்கள்:
1.95 இன்ச், 320x385 பிக்சல் IPS டிஸ்ப்ளே
600 நிட்ஸ் பிரைட்னஸ், ஸ்ப்லிட் ஸ்கிரீன்
ரக்கட் டிசைன், அலாய் மெட்டல் பாடி, IML கோட்டிங்
டிஜிட்டல் கிரவுன்
ஜிபிஎஸ் டிராஜெக்டரி
குயிக் வயர்லெஸ் சார்ஜிங்
ப்ளூடூத் காலிங்
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், வாட்ச் ஃபேஸ்கள்
அதிபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப்
ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் டிராக்கர்
இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர் போன்ற அம்சங்கள்
விஃபிட் ஆப்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ஆரஞ்சு மற்றும் வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலை சலுகையை வழங்கு வருகிறது.
- குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை தினமும் 1 ஜிபி டேட்டா, வாய்ஸ் காலிங் போன்ற பலன்களை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 87 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் பிஎஸ்என்எல் உள்பட அனைத்து நிறுவனங்களும் தங்களின் சலுகை விலையை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் அனைத்து வட்டாரங்களிலும் தனது எண்ட்ரி லெவல் சலுகை விலையை ரூ. 155 ஆக உயர்த்திவிட்டது.
அந்த வகையில் புதிய ரூ. 87 சலுகை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகை வழங்கப்பட்டு வருவதால், பலரும் இதனை ஏற்கனவே பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

பிஎஸ்என்எல் ரூ. 87 பலன்கள்:
பிஎஸ்என்எல் ரூ. 87 சலுகை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் மட்டும் இணைக்கப்படவில்லை. அந்த வகையில், இந்த சலுகை மொத்தத்தில் பயனர்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்குகிறது.
தினமும் 1 ஜிபி டேட்டா போதாத என்ற வகையில், பயனர்கள் ரூ. 97 விலை சலுகையை தேர்வு செய்யலாம். இந்த சலுகையிலும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் பலன்கள் வழங்கப்படவில்லை. எனினும், இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இது தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்கள் மொத்தத்தில் 30 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.